2013 Tamil Isai Vizha

Venue
  • Pasumpon Devar Mandapam,,
  • 100 Habibullah Road, T.Nagar,
  • Chennai,
  • Tamil nadu - 600017, India.
Organizer
  • Fetna and Sangeeth Saagar Cultural Trust,
Events Schedule
DATE TIMINGS
29 Dec 2013 4.00

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை”, தமிழகத்தில் இயங்கும் ‘இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை”யுடன் இணைந்து முதன்முறையாக சென்னையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29ம் தேதி மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ‘2013 தமிழிசை விழா” என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.
 
இடம்: பசும்பொன் தேவர் மண்டபம்
100 ஹபிபுல்லா சாலை, 
தியாகராய நகர்,
சென்னை 6000 017.
 
இந்த ‘2013” தமிழிசை விழாவில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணிவரை பாடகி சுசித்ரா பாலசுப்ரமனியம் அவர்கள் புறநானூற்றுப் பாடல்களையும், பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழிசைப் பாடல்களையும் பாட இருக்கிறார்கள். 
    
image3  image1  image2
அதன்பிறகு, மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைச் சேர்ந்த முனைவர் சுந்தரவடிவேல் வரவேற்புரை நிகழ்த்த, மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் N.சேதுராமன் அவர்கள் தலைமையேற்க இருக்கிறார்கள். 
 
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. K.P.K செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்கள். GEM தொழிற்குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் திரு R.வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்க, வேலூர் VIT பல்கலைக்கழகதின் நிறுவனர் கல்வியாளர் G.விஸ்வநாதன், கோ-ஆப்டெக்ஸ் மேலான் இயக்குநர் திரு.சகாயம் IAS மற்றும் VGP தொழில் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் திரு.V.G. சந்தோசம் ஆகியோர் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.
 
பிறகு, தமிழிசை விழாவின் முக்கிய நிகழ்வாக ”நடராஜ் நாட்டிய வித்யாலயா” வழங்கும் ‘மாவீரன் தீரன் சின்னமை நாட்டிய நாடகம்’ அரங்கேற இருகிறது. நாட்டியம்: குரு: நாகை.N.பாலகுமார்; பாடல்கள்: கவிமுகில் கோபாலகிருஷ்ணன்.
 
நிறைவில், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த ”இன்னிசை ஏந்தல்” திருபுவனம் ஆத்மநாதன் ந்னறியுரை நிகழ்த்துவார்கள். ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை’யைச் சேர்ந்த திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்.
 
தமிழிசை விழாவைக் கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் நடத்திவரும் ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை”, முதன்முதலாக அமெரிக்க்காவிற்கு வெளியே தாய்த்தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தமிழர்கள் வாழ்கின்ற உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற வேண்டும்  ​ என பேரவை விரும்புகிறது​ .

Share to Social World