| DATE | TIMINGS |
|---|---|
| 22 Oct 2017 |
துருவா - நாட்டிய நாடகம் (Lion King Musical in Bhrathanatyam )
தமிழிசை நிகழ்ச்சி
நகைச்சுவை நாடகம்
தீபாவளி நிகழ்ச்சியில் தமிழிசை பாட அழைப்பு
நியூ ஜெர்சி தமிழ் சங்கம் தீபாவளி விழாவில் நடக்க இருக்கும் தமிழ் கர்நாடக இசை (பாட்டு) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பாடகர்கள்/குழு கீழே உள்ள கூகுள் லிங்க் மூலம் விண்ணப்பிக்கவும்
https://goo.gl/forms/ijuKZHWq7Iu8iv4G2
விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் அக்டோபர் 1, 2017 9PM. தகுதிச்சுற்று மற்றும் நிகழ்ச்சி என்று இரு நிலைகளில் நடத்தப்படும்.
பாடகர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் நியூ ஜெர்சி தமிழ் சங்கத்தின் உறுப்பினராக இருத்தல் அவசியம்.
தமிழ் கர்நாடக இசை விதிமுறைகள்
-----------------------------------------------------------
1. கர்நாடக இசை வடிவில் அமைந்த தமிழ் பாடல்கள் மட்டுமே பாட இயலும்.
(உதாரணத்திற்கு பாரதியார், பாரதிதாசன், ஊத்துக்காடு வேங்கடகவி, பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் போன்றவர்களின் பாடல்கள் )
2, ராக ஆலாபனை, கல்பனா ஸ்வரம் அமைத்துப் பாட விரும்பும் பாடகர்கள் பாடலாம்.
3. ஒவ்வொருவரும் (அல்லது குழுவும்) 6 மணித்துளிகள் மிகாமல் பாடவேண்டும்.
4. சினிமா படப் பாடல்கள் கூடாது
5. தகுதிச்சுற்றில் தேர்வு செய்யப்படும் பாடகர்கள்/குழுக்கள் நிகழ்ச்சியில் பங்கு கொள்வார்கள்.
6. நிகழ்ச்சியில் பாடகர்கள்/குழு பக்கவாத்திய துணையுடன் பாட வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் பாடகர்கள்/குழு செய்ய வேண்டும்.
7. தகுதிச்சுற்றில் எந்த ஒரு பக்கவாதியமோ அல்லது இசைதட்டோ பயன் படுத்தக்கூடாது.
8.குறைந்தது 4 குழு பதிவு செய்தால் மட்டுமே தகுதிச்சுற்று போட்டி நடத்தப்படும்.
9. பாடகர்களின் வயது 10'ல் இருந்து 25'க்கு மிகாமல் இருக்க வேண்டும்