| DATE | TIMINGS |
|---|---|
| 28 Mar 2015 | 9.00 AM to 5.00 PM |
| 29 Mar 2015 | 9.00 AM to 5.00 PM |
தேன்தமிழில் திளைத்து, நம் பழந்தமிழரின் வாழ்க்கையையும், வாழும் நெறிகளையும் தரணியோர்க்கு தகைவாய் தந்திட்ட சங்க இலக்கியங்களை சுவைத்து மகிழ்ந்திட மற்றும் மனத்தில் இருத்திட, வாரீர் விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கிடும் சங்க இலக்கியப் பயிலரங்கத்திற்கு. தமிழ் நலம் கருதி தளராமல் உழைத்திடும் திருமதி. வைதேகி ஹெர்பெர்ட் அவர்கள், எளிய தமிழிலிலும், ஆங்கிலத்திலும் விரிவுரை அளித்து நம் மூதாதையரின் கலை, பண்பாடு, காதல், வீரம், வாழ்வியல் நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், தத்துவங்கள், மற்றும் வரலாற்றினை எவ்வாறு அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, ஆகியவை தீந்தமிழில் சுவைபடத் தருகின்றன என விவரிக்க இருக்கிறார்.
இவ்வரிய வாய்ப்பினைத் தவறவிடாமல், கலந்துகொண்டு பயனடையுமாறு வருக வருக என வரவேற்கின்றோம்.
இந்தப் பயிலரங்கம் இரண்டு நாட்களுக்கு மார்ச் 28-29 தேதிகளில், ∴ப்ரீமான்ட் Coconut Hallல் காலை 9ல் இருந்து, மாலை 5மணி வரை நடைபெறும்.
கட்டணம் $125 மட்டுமே, அந்த $125 சங்க இலக்கிய உரை / பயிற்சி புத்தகங்களுக்காகப் பயன்படுத்தப்படும். இந்தப்படத்திலுள்ள அனைத்துப் புத்தகங்களும் நீங்கள் எதிர்காலத்தில் சங்கஇலக்கியம் படிக்க உதவியாயிருக்கும்.
இந்த நிகழ்ச்சி எற்பாட்டிற்கான மற்ற செலவினங்களை தமிழ்மன்றமே ஏற்றுக்கொள்கிறது.