| DATE | TIMINGS |
|---|---|
| 02 Nov 2013 | 5.00 |
அன்புள்ள தமிழ் நண்பர்களே! அனைவருக்கும் வணக்கங்கள்!
வரும் நவம்பர் 2-ம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு துர்க்கையம்மன் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள "தமிழ்ச்சங்கமம் 2013" கலைவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! இந்த விழாவை சிறப்பிக்க உலக தமிழர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான திரு.தமிழருவி மணியன் ஐயா அவர்களும் பேராசிரியை திருமதி பர்வீன் சுல்தானா அவர்களும் தமிழகத்தில் இருந்து வருகை தரவுள்ளனர்! - அரவிந்தகுமாரனின் "நீந்திக்கடந்த நெருப்பாறு" - நூல் வெளியீடு - "தமிழருவி மணியண் ஐயா அவர்களின் தேன்தமிழ் சொற்பொழிவு" - தலைப்பு: "நம்மை நாமறிவோம்" - "பேராசிரியை பர்வீன் சுல்தானா தலைமையில் உள்ளூர் பேச்சாளர்கள் பங்கேற்கும் விறுவிறுப்பான கருத்துமிக்க பட்டிமன்றம்" பட்டிமன்ற தலைப்பு: " புரிந்து கொண்டவர்கள்" "பெற்றோரா?" அல்லது " பிள்ளைகளா?" அனைவரும் வருக! தமிழருவியில் நனைக! அனுமதி இலவசம்!