நாள்/நேரம் : ஜனவரி 9, 2016 சனிக்கிழமை மாலை 4மணி முதல்
இடம் : PAL Recreation Center, 9836, Greenside Drive, காக்கிஸ்வில், பால்டிமோர் அருகில், மேரிலாந்து, அமெரிக்கா.தமிழகம் தாண்டி பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், அமெரிக்கா மேரிலாந்து காக்கிஸ்வில் நண்பர்களுடன் இணைந்து, உலகுக்கெல்லாம் உணவு படைக்கும் உழவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, நமது அடுத்த தலைமுறையினர்க்கும் தமிழர்கள் அல்லாத வேறு மொழி பேசும் இந்திய அன்பர்களுக்கும், அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த வெளிநாட்டு நண்பர்களுக்கும் நமது பண்பாட்டு விழுமியங்களை, பாரம்பரிய மகத்துவங்களை, பல்வேறு கலைவடிவங்களை அறிமுகப் படுத்தவும், அவற்றின்பால் அவர்களை ஆற்றுப்படுத்தவும் நோக்கம் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.. நமக்காக விழா அரங்கில் 'உழவர் கிராமம்' ஒன்று அமைத்து கிராமியத் திருவிழா, நமது காக்கிஸ்வில் பகுதியில் நிகழ இருக்கிறது.. அனைவரும் வருக!!!
வில்லுப்பாட்டு, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், குறவர்-குறத்தி நடனம், விவசாய மகளிர் கும்மி நடனம், அரங்கம் அதிரும்
பறையிசை, கோலாட்டம் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேலான பெரியவர்கள்-குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கும், அட்டகாசமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்..
பம்பரம்.. பல்லாங்குழி.. கல்லாங்காய்.. தாயம்..பச்சக்குதிரை தாண்டுதல்.. கயிறு இழுத்தல்.. கரும்பு கடித்தல்.. உரி அடித்தல் (பானை உடைத்தல்).. சடுகுடு ஆட்டம்.. நொண்டி விளையாட்டு.. கோ கோ விளையாட்டு.. எனப் பல்வேறு வண்ணமயமான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்..
மருதாணி.. மல்லிகைப்பூ.. பொங்கல் கோலம்.. என மண்மணம் மாறாத பாரம்பரிய மரபு வடிவங்கள்..நகைச்சுவைப் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு சுவையான கிராமியக் கலை நிகழ்ச்சிகள்.. முழுக்க முழுக்க சினிமாப் பாடல்கள் இல்லாத, ஆனாலும் குதூகலம் நிறைந்த பல்வேறு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்.. இன்னும் பற்பல உங்கள் செவிகளுக்கும், சிந்தனைக்கும் விருந்து தரும் விதமாக பார்த்துப் பார்த்துக் தேர்வு செய்து, நெய்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது..
தேன் மிட்டாய், கம்மர்கட்டு, எள்ளு உருண்டை, கடலை மிட்டாய், இஞ்சி மரப்பா, உப்பு சீடை உட்பட ஒவ்வொரு விருந்தினர்க்கும் நம் ஊர் தீனிப் பொட்டலங்கள்..
இனிப்புப் பொங்கல் உட்பட வந்திருக்கும் விருந்தினர்கள் அனைவருக்கும் நமது ஊர் வழக்கத்தில், பந்தி போட்டு உணவு பரிமாறி விருந்தோம்பல் புரிந்து விருந்தினர்களை மகிழ்விக்கவும் திட்டமிட்டு ஏராளமான தன்னார்வலர்கள் ஊக்கத்துடன் ஏற்பாடு செய்து வருகிறார்கள்..
பொங்கல் சிறப்புக் கண்காட்சி.. பொங்கல் சிறப்புத் தோரணங்கள்.. சிறுவர்-சிறுமிகளுக்கான பயிலரங்கு.. இன்னும் நிறைய.. நிறைய.. நேரில் வாருங்கள்.. நாம் சிறுவயதில் ஆர்வமுடன் பங்கேற்று அனுபவித்த கிராமியப் பொங்கல் விழாவை எண்ணங்களில் மட்டும் அசை போடாமல், நேரிலும் கண்டு, உங்களையும் நேரில் ஈடுபடுத்திக்கொண்டுக் கொண்டாடி இன்புற வாருங்கள்..
எதிர்வரும் ஜனவரி 9, 2016 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் கொண்டாட்டத்துக்குத் தயார் ஆகுங்கள்.. இந்த அரிய திருவிழாவுக்கு இன்னும் வெகு சில நாட்களே இருப்பதாலும், இன்னும் வெகுசில நுழைவுச் சீட்டுகளே இருப்பதாலும், இன்றே இப்போதே முன்பதிவு செய்து உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள்..
For Online Tickets Link:
http://helpingroot.org/pongal-2016/ Please rush as we are planning to close the ticket sale due to overwhelming response..
All are welcome!
We can't wait to meet you all to join us in this biggest Indian Harvest Festival Celebration in our area.