| DATE | TIMINGS |
|---|---|
| 19 Sep 2015 | 5.30 PM |
மதிப்பிற்குரியவருக்கு, வணக்கம்.
தமிழ்ச்சமூகத்தைக் கவர்ந்திழுத்த கதைசொல்லியாக, மேடைகளை வசப்படுத்திய பேச்சாளராக, எழுதி குவித்த எழுத்தாளராக, எல்லாவற்றுக்கும் மேலாக அதிஅற்புதமான மனிதராக திகழ்ந்த தென்கச்சி கோ.சுவாமிநாதனின் வாழ்க்கை, அவரது கதைகளைப் போலவே சுவராசியமானது. வார்த்தை மாறாத அவரது வாழ்க்கையை 'தென்கச்சி - கதை ராஜாவின் கதை' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறேன்.
வரும் 19 -9- 15 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அந்த நூலின் வெளியீட்டுவிழாவுக்கு காவிரி அமைப்பும் நண்பர்களும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னை , ஆழ்வார்ப்பேட்டை, 1. எல்டாம்ஸ் சாலையிலுள்ள சி.பி.ஆர். அரங்கத்தில் (சாம்கோ ஓட்டல் எதிரில்) நடைபெறும் விழாவுக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். வழக்கமான நூல் வெளியீட்டு விழாவாக இல்லாமல், குடும்பத்தோடு சிரித்து மகிழ்கிற, நெகிழ்கிற விழாவாக இதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். தாங்கள் அவசியம் குடும்பத்தோடு வருகை தந்து சிறப்பித்து, வாழ்த்தி மகிழ்ந்திட வேண்டுகிறேன்.
மாறா அன்புடன்.....
கோமல் அன்பரசன்,